என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல் மூட்டைகள்
    X
    நெல் மூட்டைகள்

    காஞ்சிபுரம் வாணிப கிடங்கில் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணானது

    காஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள நியாயவிலை கடைகளுக்கு அரிசி மூட்டைகளை விநியோகப்பதில் பிரச்சனை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிபாக்கம் பகுதியில் நுகர்பொருள் வாணிப கிடங்கு உள்ளது.

    இங்கு பல மாதங்களுக்கு தேவையான 7 ஆயிரம் டன் அரிசி மற்றும் நெல் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.

    இந்த கிடங்கில் வைக்கப்பட்டுள்ள சுமார் 2,700 டன் அரிசி மூட்டைகள் தரமற்று கருப்பு, மஞ்சள் மற்றும் பழுப்பு நிறத்திற்கு மாறி சேதம் அடைந்து உள்ளன.

    இதேபோல் இந்த கிடங்கில் திறந்தவெளியில் வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தன. இதனால் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூட்டைகளில் நெல்கள் முளைத்து உள்ளன.

    இதனால் காஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள நியாயவிலை கடைகளுக்கு அரிசி மூட்டைகளை விநியோகப்பதில் பிரச்சனை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

    எனவே அதிகாரிகள் கிடங்கில் உள்ள அனைத்து அரிசி மூட்டைகளையும், நெல் மூட்டைகளையும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    Next Story
    ×