என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
வாக்காளர் பட்டியல் குளறுபடிகளை சரி செய்தபின் பி.ஏ.பி., கிராமநீர் பயன்படுத்துவோர் சங்கங்களுக்கு தேர்தல் நடத்த வேண்டுகோள்
பரம்பிகுளம்-ஆழியார் திட்ட பாசன கால்வாய்களில் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.
திருப்பூர்:
வாக்காளர் பட்டியல் குளறுபடிகளை சரி செய்தபின் பி.ஏ.பி., கிராம நீர் பயன்படுத்துவோர் சங்கங்களுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, பி.ஏ.பி., வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பரம்பிகுளம்-ஆழியார் திட்ட பாசன கால்வாய்களில் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. நில உரிமைதாரர் பட்டியல் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியல்களில் குளறுபடிகள் உள்ளன.
வாக்காளர் பட்டியலை சரிபார்த்தபின் பி.ஏ.பி., சங்கங்களுக்கு தேர்தல் நடத்தவேண்டும்.பி.ஏ.பி., முதல் மண்டல பாசனத்துக்கு சட்ட விதிகள்படி சமச்சீர் பாசனத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். பி.ஏ.பி., தொகுப்பு அணைகளில் நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளது.
ஆனால் வெள்ளகோவில், காங்கயம் பி.ஏ.பி., பாசன பகுதிகள் மட்டும் வறட்சியில் இருந்து மீளவில்லை. பி.ஏ.பி., பிரதான கால்வாய் குப்பை தொட்டியாக மாறியுள்ளது. குப்பை, கோழிக் கழிவுகள் கால்வாயில் கொட்டப்படுகின்றன.
இதுகுறித்து தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் மாவட்ட நிர்வாகமும், பி.ஏ.பி., நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






