என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
போலீஸ்காரர் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு
மணிமுத்தாறு பட்டாலியனில் வேலை பார்த்த போலீஸ்காரர் மோட்டார் சைக்கிளுக்கு தீவைக்கப்பட்டது.
நெல்லை:
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் ஆறுமுகம் (வயது 31). இவர் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு 12-வது பட்டாலியனில் பணியாற்றி வருகிறார்.
நேற்று இரவு இவர் சக போலீஸ்காரர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் அனைவரும் தூங்க சென்றுவிட்டனர். அப்போது அவரது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த அவரது மோட்டார் சைக்கிள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.
உடனே பக்கத்து வீடுகளில் இருந்த போலீஸ்காரர்கள் ஓடிவந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் மோட்டார் சைக்கிள் முழுவதுமாக எரிந்து எலும்புக்கூடானது. இதுதொடர்பாக அவர் கல்லிடைக்குறிச்சி போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதில் சக போலீஸ்காரர் ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாகவும், அவரை பிடித்து விசாரிக்க வேண்டும் எனவும் கூறி உள்ளார்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த மர்மநபரை தேடி வருகின்றனர்.
Next Story






