search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விக்கிரமராஜா
    X
    விக்கிரமராஜா

    ஜவுளி-காலணிகளுக்கு ஜி.எஸ்.டி. வரி விலக்கு வேண்டும்- விக்கிரமராஜா வலியுறுத்தல்

    நெசவுத் தொழிலாளர்கள், விற்பனையாளர்கள், பொது மக்கள் பெருமளவு பாதிக்கப்படுவதோடு, மக்களின் வாங்கும் திறனும் குறைந்து, தொழில் நசுக்கப்படும் நிலை உருவாகிவிடும்.

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் அழுத்தத்தின் காரணமாகவும், ஜவுளித் தொழில் உரிமையாளர்களின் எதிர்ப்பு குரல் காரணமாகவும், ஜி.எஸ்.டி. 46-வது கவுன்சில் கூட்டத்தில் ஜவுளித்துறைக்கான ஜி.எஸ். டி. வரி உயர்வை மத்திய அரசு தள்ளிவைத்திருப்பதை பேரமைப்பு வரவேற்கின்றது.

    ஜிஎஸ்டி

    அதே சமயம் மீண்டும் பிப்ரவரி மாத ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் இந்த வரி உயர்வு குறித்து, ஆய்வு செய்து முடிவு அறிவிக்கப்படும் என்று அறிவித்திருப்பது பேரமைப்பு கருத்துக்கு ஏற்புடையது அல்ல.

    குறிப்பாக அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்கள் பயன்பாட்டிற்கான ஜவுளிப் பொருட்களின் மீதான வரி ஏற்றம் ஏற்புடையது மட்டு மல்ல,

    இதனை நம்பியிருக்கும் நெசவுத் தொழிலாளர்கள், விற்பனையாளர்கள், பொது மக்கள் பெருமளவு பாதிக்கப்படுவதோடு, மக்களின் வாங்கும் திறனும் குறைந்து, தொழில் நசுக்கப்படும் நிலை உருவாகிவிடும். எனவே ஜி.எஸ்.டி வரி உயர்வை முழுமையாக தவிர்த்து அறிவிப்பு வெளியிட பேரமைப்பு வலியுறுத்துகின்றது.

    அதே போல 46-வது கவுன்சில் கூட்டத்தில் காலணிகளுக்கான ஜி.எஸ்.டி வரி உயர்வை தவிர்த்து அறிவிப்பு வெளியிடாதது காலணி தொழில் துறையினர், வணிகர்கள் மற்றும் பயனாளிகளான பொது மக்களுக்கும் பெரும் ஏமாற்றம் அளிப்பதாக இருக்கின்றது.

    ஜனவரி 1 முதல் காலணிகளுக்கான ஜி.எஸ்.டி வரி உயர்வு நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். குறிப்பாக அடித்தட்டு மக்கள் பயன்படுத்தும் 1000 ரூபாய்க்கு குறைவான காலணிகளுக்கும் இந்த வரி உயர்வு மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

    எனவே காலணிகள் மீதான ஜி.எஸ்.டி. வரி உயர்வை உடனடியாக ரத்து செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும்.

    இவ்வாறு ஏ.எம். விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

    இதையும் படியுங்கள்... ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் நுரையீரல் பாதிப்பு குறைவு - ஆய்வில் தகவல்

    Next Story
    ×