என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கைது
  X
  கைது

  குடிபோதையில் மகளுக்கு பாலியல் தொல்லை- போக்சோவில் தொழிலாளி கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வானூர் அருகே குடிபோதையில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
  வானூர்:

  விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள தைலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன் (வயது 47). தச்சு தொழிலாளி. அவரது மனைவி வசந்தி. இவர்களுக்கு 11-ம் வகுப்பு படிக்கும் மகள் உண்டு.

  கடந்த சில நாட்களாக கேசவன் குடிபோதையில் வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி நேற்று அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு கேசவன் வந்தார்.

  அப்போது வீட்டில் அவரது மகள் தனியாக இருந்தார். போதை தலைக்கேறிய கேசவன் தனது மகள் என்றும் பாராமல் குடிபோதையில் பாலியல் தொல்லையில் ஈடுபட்டார். அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சல்போட்டார்.

  சத்தம்கேட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். சிறிது நேரத்தில் வெளியே சென்றிருந்த கேசவனின் மனைவி வசந்தியும் அங்கு வந்தார். அப்போது அந்த மாணவி தனது தாயிடம் நடந்த சம்பவம் பற்றி அழுதபடி கூறினார்.

  இதுகுறித்து கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கேசவனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

  Next Story
  ×