என் மலர்
உள்ளூர் செய்திகள்

தற்கொலை
பாலக்கோடு அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
பாலக்கோடு அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த வீராசனூரை சேர்ந்தவர் அரவிந்தன் (வயது24). இவரது தந்தை ரவி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கடன் தொல்லையால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். பிறகு அவரது குடும்பத்தினர் பெங்களூருவில் குடியேறினர். இந்தநிலையில் நேற்று பெங்களூருவில் இருந்து ஊருக்கு வந்த அரவிந்தன் தனது தந்தை சமாதியின் மீது விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






