என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொங்கல் தொகுப்பு வழங்க பவானி பகுதிகளில் தயாரான துணிப்பைகள்.
பொங்கல் தொகுப்பு வழங்கும் பைகள்- தயாரிப்பு பணிகள் தீவிரம்
பவானி சுற்றுவட்டார பகுதியில் மட்டும் 80 லட்சத்துக்கும் மேற்பட்ட துணி பைகள் தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
பவானி:
தமிழக அரசு பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி, வெல்லம் உள்பட 20 பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தது. பொங்கல் தொகுப்புகள் துணிபைகளில் வைத்து வழங்க அரசு திட்டமிட்டு உள்ளது. இதில் 2 கோடிக்கும் மேற்பட்ட அட்டைதாரர்களுக்கு ஜனவரி 3-ந் தேதி முதல் பொங்கல் தொகுப்பு விநியோகிக்கப்பட உள்ளது.
இதையொட்டி பொங்கல் தொகுப்பு வழங்குவதற்காக பை தயாரிக்கும் பணி ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான காடையாம்பட்டி, சேர்வராயன்பாளையம் ஊராட்சிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக பெண் தொழிலாளர்கள் அதிக அளவில் பைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சிலர் வீடுகளிலும் மேலும் பலர் குழுவாக சேர்ந்து பைகளை தயாரித்து வருகின்றனர்.
பவானி சுற்றுவட்டார பகுதியில் மட்டும் 80 லட்சத்துக்கும் மேற்பட்ட துணி பைகள் தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இங்கு தயார் செய்யப்படும் பைகள் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி மற்ற பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என பைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ள தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Next Story