என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
டிஎன்பிஎஸ்சி
டி.என்.பி.எஸ்.சி. புதிய பாடத்திட்டத்தில் இருந்து திருக்குறள் நீக்கம்
By
மாலை மலர்24 Dec 2021 11:12 AM GMT (Updated: 24 Dec 2021 12:15 PM GMT)

அதிகாரிகள் நிலையிலான போட்டித் தேர்வுகளான குரூப் 2, குரூப் 2ஏ மெயின் தேர்வின்போது திருக்குறளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.
சென்னை:
டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் நேற்று இரவு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில், குரூப்-4, குரூப்-2, குரூப்-1 உள்ளிட்ட பலவகையான தேர்வுகளில் என்னென்ன பாடதிட்டங்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த தேர்வுகளுக்கான மாதிரி கேள்விகளும் வெளியிடப்பட்டன. இதில், ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த திருக்குறள் பாடத்திட்ட பகுதி முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் நிலையிலான போட்டித் தேர்வுகளான குரூப் 2, குரூப் 2ஏ மெயின் தேர்வின்போது திருக்குறளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. தினசரி வாழ்வில் திருக்குறள் பயன்பாடு, மனித இனத்தில் திருக்குறள் ஏற்படுத்திய தாக்கம், சமூக பொருளாதார அரசியலில் திருக்குறளின் பங்கு, திருக்குறளின் தத்துவம் என 6 தலைப்புகளில் திருக்குறன் சார்ந்த பகுதிகள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. 2019ம் ஆண்டு வெளியிடப்பட்ட பாடத்திட்டத்தில் திருக்குறள் பாடத்திட்டம் இடம்பெற்றிருந்தது.
ஆனால் நேற்று வெளியிடப்பட்ட பாடத்திட்டத்தில் திருக்குறள் பகுதி நீக்கப்பட்டுள்ளது. 2019க்கு முன்பு இருந்த பாடத்திட்டம் மீண்டும் இடம்பெற்றிருப்பதாக துறைசார்ந்த பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். திருக்குறள் முழுமையாக புறக்கணிக்கப்படடிருப்பது தேர்வர்கள் மற்றும் தமிழார்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×