search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி-தயாரிப்பு பொருட்களின் கண்காட்சியினை பார்வையிட்டார் முதலமைச்சர்
    X
    மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி-தயாரிப்பு பொருட்களின் கண்காட்சியினை பார்வையிட்டார் முதலமைச்சர்

    முகாம்கள் அமைத்து சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்குவது துரிதப்படுத்தப்படும்- மு.க.ஸ்டாலின்

    மகளிர் தயாரிக்கும் பொருளுக்கு உரிய விலை கிடைக்கவும், அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களைச் சந்தைப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
    சென்னை:

    திருத்தணியில் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சுழல் நிதி வழங்கி பேசியதாவது:-

    இன்று திருத்தணியில் நாம் தொடங்கி வைக்கிற இந்த கடனுதவி தமிழ்நாடு முழுக்க இருக்கிற 58 ஆயிரத்து, 463 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 7 லட்சத்து 56 ஆயிரத்து 142 பயனாளிகளுக்கு 2 ஆயிரத்து 750 கோடி ரூபாய் அளவுக்குக் கடனுதவியும் நலத்திட்ட உதவிகளும் கிடைக்க இருக்கிறது. நீங்கள் அனைவரும் இதைப் பயன்படுத்தி வளர, உயர எனது வாழ்த்துகள்.

    எனக்கு மனநிறைவை வழங்கக்கூடிய திட்டம் மட்டுமல்ல எனக்கு அதிகளவிலான பெயரை வாங்கிக் கொடுத்த திட்டமாகவும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைந்துள்ளன.

    ஒரு பெண், யார் தயவையும் எதிர்பார்த்துக் காத்திருக்காமல் சுயமாக நிற்பதற்கும் வாழ்வதற்கும் அடித்தளம் அமைக்கக் கூடிய திட்டம் தான் இந்த மகளிர் சுய உதவிக் குழுத் திட்டம் ஆகும்.

    மகளிர் தயாரிக்கும் பொருளுக்கு உரிய விலை கிடைக்கவும், அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களைச் சந்தைப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    வட்டார அளவிலான கூட்டமைப்புகளை ஏற்படுத்துவதன் மூலமாக கூட்டுறவு வங்கிக் கடன்களுக்கு ஏற்பாடு செய்து வருகிறோம்.

    இந்தியாவிலேயே முதன் முதலாக மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்குவதற்கான இலக்கு நிர்ணயம் செய்யும் முறை நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது 2007-ம் ஆண்டு தான் அறிமுகம் செய்யப்பட்டது.

    இதுவரை 36 லட்சத்து 97 ஆயிரத்து 59 குழுக்களுக்கு ஒருலட்சத்து 4 ஆயிரத்து 13 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டில் ரூ.20 ஆயிரம் கோடி கடன் தர இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதுவரை ரூ. 6777 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் இந்த தொகை ரூ. 10 ஆயிரம் கோடி ஆகிவிடும். அடுத்த ஆண்டுக்குள் அடுத்த 10 ஆயிரம் கோடி ரூபாய் இலக்கை எட்டிட நான் உத்தரவிட்டுள்ளேன். முகாம்கள் அமைத்து கடன் வழங்குவதை துரிதப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளேன்.

    ரூ.10 முதல் 20 லட்சம் வரை சொத்துப் பிணையம் இல்லாமல் கடன் வழங்க குறுந்தொழில் கடன் உத்தரவாத நிதியும் வழங்கப்பட்டு வருகிறது.

    ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளை உருவாக்கவும், அக்கூட்டமைப்புகளுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கவும் உத்தரவுகள் போடப்பட்டுள்ளது. இந்த வகையில் 10 லட்சம் முதல் ஒன்றரைக்கோடி வரை கடன் பெறலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.


    Next Story
    ×