search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    மகாகவி பாரதியாருக்கு மு.க.ஸ்டாலின் புகழாரம் - ‘நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா’

    தமிழுக்குத் தொண்டு செய்த அப்பைந்தமிழ்த் தேர்ப்பாகனின் நினைவைப் போற்றிடும் நமது அரசின் முயற்சிகள் என்றும் தொடர்ந்திடும் என முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

    சென்னை:

    மகாகவி பாரதியார் 140-வது பிறந்த நாள் விழா இன்று (சனிக்கிழமை) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.

    அரசு சார்பில் சென்னையிலும் எட்டையபுரத்திலும் விழாக்கள் நடத்தப்பட்டன.

    பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலை தள பதிவில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது-

    நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா! 

    திறம்பாட வந்த மறவன்! 

    அறம்பாட வந்த அறிஞன்! 

    படரும் சாதிப் படைக்கு மருந்தாம் மகாகவி பாரதியாரின் 140-ஆவது பிறந்தநாள் இன்று! 

    மகாகவி பாரதியார்

    தமிழுக்குத் தொண்டுசெய்த அப்பைந்தமிழ்த் தேர்ப்பாகனின் நினைவைப் போற்றிடும் நமது அரசின் முயற்சிகள் என்றும் தொடர்ந்திடும்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதையும் படியுங்கள்...துப்பாக்கி சுடும் போட்டியில் கிடைத்த 11 பதக்கங்களை பிபின் ராவத்துக்கு அர்ப்பணித்த வீராங்கனை

    Next Story
    ×