என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது
லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றவரை கைது செய்த போலீசார் அவரை பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் ஆத்தூர் சாலையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பெரம்பலூர் போலீசார் ஆத்தூர் சாலையில் ஒரு டீக்கடை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டபோது, பெரம்பலூர் வள்ளலார் தெருவை சேர்ந்த வடிவேல் (வயது 54) தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 62 லாட்டரி சீட்டுகளையும் ரூ.8 ஆயிரம் மற்றும் 2 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் வடிவேலை பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.

Next Story