என் மலர்
உள்ளூர் செய்திகள்

நகை பறிப்பு
காஞ்சிபுரத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு
காஞ்சிபுரத்தில் பெண்ணிடம் இருந்து நகை பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் அருகே உள்ள தாமல்வார் தெருவில் மாவு கடை நடத்தி வருபவர் பூங்கொடி (வயது36). இவர் வழக்கம் போல் இரவு கடையை பூட்டிவிட்டு தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தவாறு வந்த மர்ம நபர்கள் 2 பேர் பூங்கொடி அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பிச்சென்றனர்.
பூங்கொடி கூச்சலிட்டதையடுத்து அந்த பகுதி மக்கள் இது குறித்து சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் அந்த பகுதிகளில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Next Story






