search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின் ஆய்வு
    X
    மு.க.ஸ்டாலின் ஆய்வு

    கனமழையால் வெள்ளக்காடான சென்னை- நேரில் ஆய்வு செய்து பணிகளை முடுக்கி விட்ட முதல்வர்

    கொட்டும் மழையிலும் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட அவர், சாலைகளில் தேங்கி உள்ள மழைநீரை உடனடியாக அகற்றும்படி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
    சென்னை:

    வங்கக்கடலில் தொடரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், நெல்லை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 

    சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.  மழைநீர் சூழ்ந்துள்ள இடங்களில் மின் மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 

    மு.க.ஸ்டாலின் ஆய்வு

    இந்நிலையில், சென்னையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆய்வு செய்தார். கொட்டும் மழையிலும் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட அவர், சாலைகளில் தேங்கி உள்ள மழைநீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளும்படி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, சேகர் பாபு, எம்எல்ஏக்கள் தாயகம் கவி, பரந்தாமன்,  ஜெ.கருணாநிதி, டாக்டர் எழிலன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் திவால் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
    Next Story
    ×