
தங்கம் விலையில் சில நாட்களாக குறைவு காணப்பட்டு வந்தது. நேற்று ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்து 920-க்கு விற்றது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்தது.
சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.48 அதிகரித்து ரூ.35,968-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4,496 ஆக உள்ளது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிலோ வெள்ளி ரூ.67,800 ஆகவும், ஒரு கிராம் வெள்ளி ரூ.67.80 ஆகவும் உள்ளது.