search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த முதலமைச்சர்
    X
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த முதலமைச்சர்

    மணலி பகுதியில் கொசஸ்தலை ஆற்று வெள்ளம்- பாதிக்கப்பட்ட பகுதிகளை மு.க.ஸ்டாலின் பார்த்தார்

    மணலி புதுநகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடிவுடை அம்மன் நகர், மகாலட்சுமி நகர் பகுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.
    திருவொற்றியூர்:

    கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

    மேலும் திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகமாகி, அதில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

    இந்த நிலையில் பூண்டி ஏரியில் இருந்து இன்று காலை 30 ஆயிரம் கன அடி நீர் உபரிநீர் திறந்து விடப்பட்டதால் கொசஸ்தலை ஆறு வழியாக வரக்கூடிய உபரிநீர் மணலி புதுநகரில் உள்ள மணலி சடயங்குப்பம் பகுதிக்குட்பட்ட வடிவுடை அம்மன் நகர், ஜெனிபர் நகர், மகாலட்சுமி நகர் போன்ற பல்வேறு பகுதிகளில் சூழ்ந்தது.

    நிவாரண முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்த முதலமைச்சர்

    இதனால் ஏராளமான குடியிருப்புகளில் வசித்த பொதுமக்களை மாநகராட்சி தீயணைப்பு துறை மற்றும் காவல்துறை அங்கிருந்து அவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர்.

    இவ்வாறு பாதிக்கப்பட்ட வடிவுடை அம்மன் நகர், மகாலட்சுமி நகர் பகுதியில் இன்று காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.

    தெருவில் சூழ்ந்துள்ள மழை நீரில் நடந்து சென்று பார்வையிட்ட அவர் மக்களிடம் குறைகளை கேட்டார். அதனைத் தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளியில் தங்கி உள்ளவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது சென்னை மாநகர ஆணையர் சந்தீப் பேடி, அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர் பாபு, எம்.எல்.ஏ.க்கள் மாதவரம் சுதர்சனம், கே.பி.சங்கர் உள்பட பலர் உடன் சென்றனர்.


    Next Story
    ×