என் மலர்

  செய்திகள்

  வானிலையின் தற்போதைய நிலவரப் படம்
  X
  வானிலையின் தற்போதைய நிலவரப் படம்

  கரையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது, சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 340 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  சென்னை:

  தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றுள்ளது.

  இது, மேலும் தீவிரமடைந்து அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மண்டலமாக மாறும்பட்சத்தில், வடதமிழக கடலோரப் பகுதிகளில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

  வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது, சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 340 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும், புதுச்சேரியில் இருந்து 300 கி.மீ., தொலைவில் கிழக்கு-தென்கிழக்கு திசையில் மையம் கொண்டுள்ளதாகவும்
  வானிலை ஆய்வு மையம்
  தெரிவித்துள்ளது.

  இதன் எதிரொலியால், இன்று அதி கனமழை பெய்யும் என்பதால், தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  இதையும் படியுங்கள்.. தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்

  Next Story
  ×