என் மலர்

  செய்திகள்

  கனமழை
  X
  கனமழை

  தொடர் மழை எதிரொலி - கன்னியாகுமரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழையால் அங்கு வெள்ளக் காடானது.
  கன்னியாகுமரி:

  தெற்கு அந்தமான் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மத்திய அந்தமான் பகுதியில் நிலவுகிறது. இது தாமதமாக வரும் 17-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

  இதன் எதிரொலியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில்  கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  கன்னியாகுமரி மாவட்டத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் அம்மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுத்தும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்கு ஒரு சில இடங்களில் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், தொடர் மழை காரணமாக கன்னியாகுமரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார். 

  Next Story
  ×