என் மலர்
செய்திகள்

பருவமழை
கனமழை எதிரொலி - சென்னை, திருவள்ளூர் உள்பட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
ராஜராஜ சோழ மன்னனின் சதய விழாவை முன்னிட்டு தஞ்சையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
சென்னை:
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் கரையைக் கடந்தது. தாழ்வு மண்டலம் கரையை கடந்த போது காற்றின் வேகம் 45 முதல் 55 கி.மீ வேகத்தில் வீசியது.
இந்நிலையில், தமிழகத்தில் சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு தொடர் மழை காரணமாக அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.
இதேபோல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என அந்தந்த நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்...தமிழகத்தில் இன்று 812 பேருக்கு கொரோனா பாதிப்பு
Next Story