என் மலர்

  செய்திகள்

  அரசு பேருந்துகள்
  X
  அரசு பேருந்துகள்

  பொதுமக்கள் ஊர் திரும்ப வசதியாக 17,719 பஸ்கள் இயக்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் மட்டும் சென்னைக்கு மொத்தம் 6300 பஸ்களுடன் 3676 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
  சென்னை:

  சென்னை உள்பட பல்வேறு ஊர்களில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

  சென்னையில் இருந்து ரெயில்கள் மற்றும் பஸ்கள் மூலமாக சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் சென்றுள்ளனர்.

  தற்போது தீபாவளி பண்டிகை முடிந்துள்ளதால் நேற்று முதல் மக்கள் தங்களது சொந்த ஊர்களில் இருந்து திரும்ப தொடங்கி உள்ளனர்.

  இதையொட்டி தமிழக அரசு 17,719 பஸ்களை இயக்க ஏற்பாடு செய்துள்ளது.

  இதில் பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு இயக்க கூடிய 2100 பஸ்களுடன் நேற்று 643 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சென்னையை தவிர்த்து மற்ற இடங்களுக்கு 730 பஸ்கள் விடப்பட்டன.

  இன்றும் வழக்கமான 2100 பஸ்களுடன் சென்னைக்கு மட்டும் 913 சிறப்பு பஸ்கள் விடப்படுகின்றன. மற்ற ஊர்களுக்கு 900 பஸ்கள் இயக்கப்படுகிறது.

  ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு 2100 பஸ்களுடன் 1729 பஸ்கள் இயக்கப்படுகிறது. சென்னையை தவிர்த்து மற்ற ஊர்களுக்கு 2180 பஸ்கள் விடப்படுகிறது.

  அரசு பேருந்துகள்


  8-ந்தேதி (திங்கட்கிழமை) வழக்கமான 2100 பஸ்களுடன் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு 1034 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சென்னையை தவிர்த்து மற்ற இடங்களுக்கு 1190 பஸ்கள் விடப்படுகிறது.

  சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் மட்டும் சென்னைக்கு மொத்தம் 6300 பஸ்களுடன் 3676 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

  சென்னையை தவிர்த்து வெளியூர்களுக்கு வழக்கமான பஸ்களுடன் 4270 சிறப்பு பஸ்கள் விடப்படுகிறது.

  இதுபற்றி போக்குவரத்து துறை உயர் அதிகாரி கூறுகையில், நாளையும், நாளை மறுநாளும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் ஒவ்வொரு பஸ் நிலையத்திலும் பஸ் புறப்படும் நேரத்தை ஒலிபெருக்கியில் அறிவிக்க ஏற்பாடு செய்துள்ளோம். தகவல் மையங்களும் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.86 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்துள்ளது என்றார்.


  Next Story
  ×