search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காற்று மாசுபாடு
    X
    காற்று மாசுபாடு

    தீபாவளி எதிரொலி- சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு

    சென்னையில் ஒவ்வொரு பகுதிவாரியாகவும், காற்று மாசு தரக்குறியீடு அளவினை மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதற்கு இடையே, பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மக்கள் உற்சாகமாக பட்டாசு வெடித்து கொண்டாடினர். பட்டாசு புகை காரணமாக, வழக்கத்தைவிட காற்று மாசு சற்று அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    குறிப்பாக சென்னையில், இன்று காலை 6 மணி நிலவரப்படி, காற்று தரக்குறியீடு 153ஆக உயர்ந்துள்ளது. சாதாரண நாட்களில் 50 முதல் 80 வரை காற்று தரக்குறியீடு இருக்கும். எனவே, இது வழக்கத்தைவிட அதிகமானது என்றாலும் 153 தரக்குறியீடு என்பது மிதமான காற்று மாசு என்பதாகும்.

    காற்று மாசு

    இதேபோல், சென்னையில் ஒவ்வொரு பகுதிவாரியாகவும், காற்று மாசு அளவினை மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

    அதன்படி, அதிகபட்சமாக பெருங்குடியில் 213 என்ற தரக்குறியீட்டில் காற்று மாசு அளவு பதிவாகி உள்ளது. இதேபோல், அரும்பாக்கம்-191, ராயபுரம்-160, மணலி-164, ஆலந்தூர்-121, வேளச்சேரி-53 என பதிவாகியுள்ளது. மாசு தரக்குறியீட்டை பொறுத்தவரை 0-50 என்ற அளவில் இருந்தால் நல்லது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், நேற்று இரசு சாலை எங்கும் புகை மண்டலமாக காட்சியளித்ததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.


    Next Story
    ×