என் மலர்

  செய்திகள்

  தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி
  X
  தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி

  தமிழக கவர்னர் ஆரோவில் வருகை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை சென்னையில் இருந்து கார் மூலம் புறப்பட்டு ஆரோவில் பகுதிக்கு வந்து சேர்ந்தார். அவரை முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர்.
  வானூர்:

  விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே ஆரோவில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் வசித்து வருகின்றனர். தொடர்ந்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஆரோவில் சேர்மனாக நியமிக்கப்பட்டார்.

  இதையொட்டி இன்று காலை சென்னையில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி கார் மூலம் 10 மணி அளவில் ஆரோவில் பகுதிக்கு வந்து சேர்ந்தார். தொடர்ந்து கவர்னரை ஆரோவில் முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர்.

  இதையடுத்து கவர்னர் ரவி ஆரோவில் மாதிர் மண்திர் தியானக் கூடத்தில் தியானம் செய்தார். இதில் புதுவை மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து 2 மாநில கவர்னர்களும் ஆரோவில் டவுன் ஹாலில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

  Next Story
  ×