என் மலர்

  செய்திகள்

  விபத்து
  X
  விபத்து

  சித்தோட்டில் லாரி மோதி பள்ளி மாணவி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சித்தோட்டில் லாரி மோதி 9-ம் வகுப்பு மாணவி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
  சித்தோடு:

  பவானி அருகே உள்ள சித்தோடு, செங்குந்தபுரம் கிழக்குவீதியை சேர்ந்தவர் அய்யாசாமி. இவரது மகள் தாரணி (14). சித்தோட்டில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

  இந்நிலையில் தாரணி நேற்று இரவு 7.30 மணியளவில் தனது வீட்டில் இருந்து பக்கத்து வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டுக்கு அருகில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக தாரணி மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே தாரணி பரிதாபமாக இறந்தார்.

  இதுகுறித்து தகவல் அறிந்த சித்தோடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×