என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    புஞ்சை புளியம்பட்டியில் தலையில் கல்லைபோட்டு கோவை தொழிலாளி படுகொலை

    புஞ்சை புளியம்பட்டியில் தலையில் கல்லைபோட்டு கோவை தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பு.புளியம்பட்டி:

    கோவை மாவட்டம் அன்னூர் பொன்னே கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (50). இவர் தனது மகளை ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி வெங்கபாளையம் என்ற பகுதியில் திருமணம் செய்து கொடுத்தார்.

    பின்னர் செல்வமும் தனது மகளுடனே தங்கி அந்த பகுதியில் கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.

    நேற்று வேலைக்கு சென்ற செல்வம் இரவு வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது மகள் மற்றும் உறவினர்கள் தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்கமுடியவில்லை.

    இந்த நிலையில் வெங்கநாயக்கன்பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் இன்று காலை கொலை செய்யப்பட்ட நிலையில் செல்வம் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் புஞ்சை புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு பவானிசாகர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபால், பவானிசாகர் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    அப்போது செல்வம் தலையில் ஹலோபிளாக் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பது தெரியவந்தது.

    Next Story
    ×