search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    குன்னூரில் குடியிருப்பு பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

    குன்னூரில் குடியிருப்பு பகுதியில் காட்டெருமை, கரடிகளின் நடமாட்டம் மட்டுமே இருப்பதாக நினைத்த மக்களுக்கு சிறுத்தை இரவில் சுற்றி திரிவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கரோலினா பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியையொட்டி ஏராளமான தேயிலை தோட்டங்களும், வனப்பகுதியும் உள்ளது. இதனால் அடிக்கடி காட்டெருமை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்துள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அந்த பகுதியில் உள்ள வீடுகளில் வளர்க்க கூடிய நாய், கோழி, ஆடு உள்ளிட்ட விலங்குகள் இரவு நேரத்தில் திடீர் திடீரென காணமால்போவது வாடிக்கையாக இருந்தது. இதனால் மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது அதில், இரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று தேயிலை தோட்டம் வழியாக குடியிருப்பு பகுதிக்குள் வருவதும், நீண்ட நேரமாக அங்கேயே சுற்றி திரியும் சிறுத்தை, பின்னர் வீட்டில் வளர்க்க கூடிய செல்லப்பிராணிகளை வாயால் கவ்வி செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.

    காட்டெருமை, கரடிகளின் நடமாட்டம் மட்டுமே இருப்பதாக நினைத்த மக்களுக்கு சிறுத்தை இரவில் சுற்றி திரிவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் விரைந்து வந்து கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்கிடையே தங்கள் பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தையால் மக்களுக்கு ஆபத்து ஏற்படும் முன்பு கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×