என் மலர்
செய்திகள்

கேசி வீரமணி
கே.சி.வீரமணி ரூ.28 கோடிக்கு சொத்துக்களை வாங்கியுள்ளார்- எப்.ஐ.ஆரில் தகவல்
கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து 2021-ம் ஆண்டு வரையில் கே.சி.வீரமணியின் சொத்து மதிப்பு அதிகமாகி உள்ளது.
சென்னை:
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது, வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள்.
போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் (எப்.ஐ.ஆர்.) கே.சி.வீரமணி அதிகளவில் சொத்துக்களை வாங்கி உள்ளது தொடர்பான பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
கே.சி.வீரமணியின் குடும்பத்தினர் ‘ஸ்டைல்’ என்ற பெயரில் பீடி கம்பெனியை நடத்தி வந்துள்ளனர். மேலும் ‘அகல்யா டிரான்ஸ்போர்ட்’ என்ற பெயரில் டிப்பர் லாரிகளையும் வைத்து இயக்கியுள்ளனர்.
கே.சி.வீரமணி 2013-ம் ஆண்டில் இருந்து 2016 வரையில் பள்ளிக்கல்வித்துறை, விளையாட்டு மட்டும் இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்துள்ளார். 2016 முதல் 2021 வரை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு அமைச்சராக பதவி வகித்துள்ளார்.

அவரது வருமானத்தின் அடிப்படையில் ரூ.1 கோடியே 83 லட்சத்து 61 ஆயிரத்து 100-க்கு மேல் அவரது சொத்து உயர்ந்து இருக்கக்கூடாது. ஆனால் கே.சி.வீரமணியின் சொத்து மதிப்பு ரூ.28 கோடியே 78 லட்சத்து 13 ஆயிரத்து 758 ஆக அதிகரித்துள்ளது. 654 சதவீதம் அளவுக்கு கூடுதலாக அவரது சொத்து மதிப்பு கூடி இருக்கிறது.
இவ்வாறு லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்துள்ள எப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போதுதான் தனது பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து 2021-ம் ஆண்டு வரையில் அவரது சொத்து மதிப்பு அதிகமாகி உள்ளது.

அவரது வருமானத்தின் அடிப்படையில் ரூ.1 கோடியே 83 லட்சத்து 61 ஆயிரத்து 100-க்கு மேல் அவரது சொத்து உயர்ந்து இருக்கக்கூடாது. ஆனால் கே.சி.வீரமணியின் சொத்து மதிப்பு ரூ.28 கோடியே 78 லட்சத்து 13 ஆயிரத்து 758 ஆக அதிகரித்துள்ளது. 654 சதவீதம் அளவுக்கு கூடுதலாக அவரது சொத்து மதிப்பு கூடி இருக்கிறது.
இவ்வாறு லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்துள்ள எப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்...தமிழகத்தில் வியாபாரிகள் பெயரில் பயங்கரவாதிகள் ஊடுருவலா?- உளவுத்துறை எச்சரிக்கை
Next Story