என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 12-ந்தேதி மெகா தடுப்பூசி முகாம்

    தடுப்பூசி பூத்துக்கள் அமைக்கப்பட்டு ஒருபூத்திற்கு குறைந்தது 200 முதல் 300 வரையிலான பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை 12.9.21 தேதியன்று தமிழக அரசின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகளின்படி, தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.

    போலியோ தடுப்பூசி முகாம் நடத்தப்படும்முறையில் தடுப்பூசி பூத்துக்கள் அமைக்கப்பட்டு ஒருபூத்திற்கு குறைந்தது 200 முதல் 300 வரையிலான பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

    இம்முகாமினை சிறப்புற செயல்படுத்துவதற்காக அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபடுத்த உள்ளனர். மேலும் இம்முகாம்களை பயன்படுத்தி இதுவரை தடுப்பூசி போடாமல் விடுப்பட்டவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இத்தகவலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதாராமு தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×