என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    கறம்பக்குடியில் ஒரேநாளில் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

    கறம்பக்குடி தாலுகாவில் நேற்று ரெகுநாதபுரம், கருப்பட்டிபட்டி, கணக்கன்காடு, எம்.தெற்கு தெரு, பிலாவிடுதி ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
    கறம்பக்குடி:

    கறம்பக்குடி தாலுகாவில் நேற்று ரெகுநாதபுரம், புதுவிடுதி, வாண்டான்விடுதி, செங்கமேடு, அதிரான்விடுதி, பட்டத்திகாடு, கருப்பட்டிபட்டி, கணக்கன்காடு, எம்.தெற்கு தெரு, பிலாவிடுதி ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவர்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இந்த முகாம்களை கறம்பக்குடி தாசில்தார் விஸ்வநாதன், வட்டார மருத்துவ அதிகாரி பஜ்ருல் அகமது ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நேற்று ஒரேநாளில் 2,021 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
    Next Story
    ×