search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    திண்டுக்கல் மாவட்டத்துக்கு மேலும் 8 ஆயிரம் கொரோனா தடுப்பூசி

    திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று வரை 3 லட்சத்து 76 ஆயிரத்து 586 பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 69 ஆயிரத்து 821 பேர் 2-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தி கொண்டு உள்ளனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடக்கிறது. இதையொட்டி அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் மட்டுமின்றி குடியிருப்பு பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தியும் தடுப்பூசி போடப்படுகிறது. அதேநேரம் மாவட்டத்துக்கு ஒதுக்கப்படும் தடுப்பூசிகளை விட, அதிக அளவில் மக்கள் குவிந்து விடுவதால் பலர் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று 6 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசியும், 1,920 கோவேக்சின் தடுப்பூசியும் வந்தன. அதில் திண்டுக்கல்லுக்கு 3 ஆயிரத்து 120 தடுப்பூசியும், பழனிக்கு 4 ஆயிரத்து 800 தடுப்பூசியும் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் நேற்று தடுப்பூசி போடப்பட்டது. இதில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு ஏராளமானோர் குவிந்தனர். இதற்கிடையே நேற்று வரை மாவட்டம் முழுவதும் 3 லட்சத்து 76 ஆயிரத்து 586 பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 69 ஆயிரத்து 821 பேர் 2-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தி கொண்டு உள்ளனர்.
    Next Story
    ×