search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீதிபதி ஏகே ராஜன்
    X
    நீதிபதி ஏகே ராஜன்

    நீட் தேர்வு வேண்டாம் என்று பெரும்பாலானோர் கருத்து- நீதிபதி ஏ.கே.ராஜன் பேட்டி

    முதல்-அமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள 165 பக்க அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பற்றி நாங்கள் எதுவும் சொல்ல முடியாது.
    சென்னை:

    நீட் தேர்வு தொடர்பாக ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர் இன்று அதன் அறிக்கையை  தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்தனர். பின்னர் நீதிபதி ஏ.கே.ராஜன், நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    நீட் தேர்வு தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வு திருப்திகரமாக இருந்தது. 86 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. இவர்களில் பெரும்பாலானவர்கள், ‘நீட் வேண்டாம்’ என்று கருத்து கூறி உள்ளனர்.

    முக ஸ்டாலின்

    இது வாக்கெடுப்பு அல்ல. பல்வேறு அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.

    முதல்-அமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள 165 பக்க அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பற்றி நாங்கள் எதுவும் சொல்ல முடியாது.

    நீட் தேர்வு ரத்தாகுமா? என்பது பற்றிய கேள்விக்கும் நாங்கள் பதில் அளிக்க முடியாது. அறிக்கையில் உள்ள தகவல்களை அரசுதான் தெரிவிக்க வேண்டும்.

    எங்களது தனிப்பட்ட கருத்துக்களை ஆய்வறிக்கையில் நாங்கள் தெரிவிக்கவில்லை.


    இதையும் படியுங்கள்...தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு இணைய வழியில் ரெம்டெசிவிர் மருந்து வழங்குவது நிறுத்தம்
    Next Story
    ×