search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு பெரியமாரியம்மன் கோவில்
    X
    ஈரோடு பெரியமாரியம்மன் கோவில்

    ஈரோடு பெரியமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் ரூ.7¼ லட்சம் உண்டியல் காணிக்கை

    கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், பெரியமாரியம்மன் வகையறா கோவில்களின் உண்டியல்களை திறந்து காணிக்கையை எண்ணும் பணியை செய்ய இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
    ஈரோடு

    ஈரோடு பெரியமாரியம்மன் வகையறா கோவில்களாக பெரியமாரியம்மன், சின்ன (நடு) மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களின் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது. அதைத்தொடர்ந்து கொரோனா தொற்று பரவல் மற்றும் முழு ஊரடங்கு காரணமாக பெரியமாரியம்மன் வகையறா கோவில்களின் உண்டியல் எண்ணும் பணி நடைபெறவில்லை. தற்போது கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், பெரியமாரியம்மன் வகையறா கோவில்களின் உண்டியல்களையும் திறந்து காணிக்கையை எண்ணும் பணியை செய்ய இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    அதைத்தொடர்ந்து நேற்று 3 கோவில்களிலும் வைக்கப்பட்டிருந்த 11 உண்டியல்களும் பெரியமாரியம்மன் கோவில் வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோவில் உதவி ஆணையர் சரவணன், அறநிலையத்துறை ஆய்வாளர் தினேஷ் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது.

    இதில் பெரியமாரியம்மன் கோவில் உண்டியல்களில் ரூ.6 லட்சத்து 66ஆயிரத்து 40 ரொக்கம், 55 கிராம் தங்கம், 155 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்து இருந்தது. சின்னமாரியம்மன் கோவில் உண்டியல்களில் ரூ.78 ஆயிரத்து 460 ரொக்கம், 2 கிராம் தங்கம், 18 கிராம் வெள்ளி பக்தர்களின் காணிக்கையாக கிடைத்தது. காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களில் ரூ.46ஆயிரத்து 760 ரொக்கம், ஒன்றரை கிராம் தங்கம், 14 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது.

    மொத்தம் 3 கோவில்களிலும் சேர்த்து ரூ.7 லட்சத்து 31 ஆயிரத்து 860 ரொக்கம் மற்றும் 58.5 கிராம் தங்கம், 187 கிராம் வெள்ளி பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இந்த பணியின்போது, பெரியமாரியம்மன் வகையறா கோவில்களின் செயல்அலுவலர் ரமணிகாந்தன் உடன் இருந்தார்.
    Next Story
    ×