என் மலர்
செய்திகள்

அபராதம்
சேத்துப்பட்டு தாலுகாவில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்களுக்கு அபராதம்
ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்டவர்கள் என பலரை அடையாளம் கண்டு அவர்களுக்கு அபராதம் விதித்து, மொத்தம் ரூ.7,500 வசூல் செய்யப்பட்டது.
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு வருவாய்த்துறையினர், ஊரக வளர்ச்சித்துறையினர், போலீஸ் துறையினர் இணைந்து சேத்துப்பட்டு, நெடுங்குணம், கொழப்பலூர், தேவிகாபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை கடைப்பிடிக்கிறார்களா? என கண்காணித்து வருகின்றனர்.
தாசில்தார் பூங்காவனம், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் மற்றும் வருவாய் அலுவலர் சுப்பிரமணி, கிராம நிர்வாக அலுவலர்கள் ஜான்சன், ரகுராமன், முருகானந்தம், துரை ஆகியோர் நேற்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டபோது, முகக் கவசம் அணியாமல் வந்தவர்கள், அதிக மக்கள் கூடும் பகுதிகளில் சமூக விலகலை கடைப்பிடிக்காதவர்கள், ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்டவர்கள் என பலரை அடையாளம் கண்டு அவர்களுக்கு அபராதம் விதித்து, மொத்தம் ரூ.7,500 வசூல் செய்யப்பட்டது.
Next Story






