என் மலர்
செய்திகள்

கடைக்கு சீல்
போளூரில் ஊரடங்கை மீறி வியாபாரம் செய்த ஜவுளிக்கடைக்கு சீல்
ஊரடங்கு அமலில் உள்ளதை கடைப்பிடிக்காமல் கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டு இருந்த ஒரு ஜவுளிக்கடைக்கு சீல் வைத்தனர்.
போளூர்:
போளூரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, வருவாய் ஆய்வாளர் பிரேம்நாத், துப்பரவு ஆய்வாளர் ரவிக்குமார் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கு அமலில் உள்ளதை கடைப்பிடிக்காமல் கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டு இருந்த ஒரு ஜவுளிக்கடைக்கு ‘சீல்’ வைத்தனர்.
Next Story






