என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்ட முத்தழகி
    X
    கைது செய்யப்பட்ட முத்தழகி

    அந்தியூர் அருகே போலி பெண் டாக்டர் கைது

    வட்டார மருத்துவ அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் முத்தழகியை கைது செய்தார்கள்.
    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள காட்டுப்பாளையத்தில் மருந்துக்கடை நடத்தி வருபவர் முத்தழகி (வயது 51). இவர் பொதுமக்களுக்கு மருந்து மாத்திரை வழங்குவது மற்றும் ஊசி போடுவது உள்பட பல்வேறு சிகிச்சைகள் அளித்து வருவதாக கலெக்டர் கதிரவனுக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து கலெக்டர் கதிரவன் உத்தரவின்பேரில் அந்தியூர் தாசில்தார் வீரலட்சுமி, வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் மோகனவள்ளி, போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் காட்டுப்பாளையத்துக்கு சென்று முத்தழகியிடம் விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது முத்தழகியின் வீட்டில் ஊசி போடுவதற்கு தேவையான மருந்துகள், ஊசிகள், கையுறைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், அந்தியூர் அருகே உள்ள மூக்கம்பாளையத்தை சேர்ந்த முத்தழகி 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்பதும், பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் உதவியாளராக வேலை பார்த்த அனுபவத்தில் பொதுமக்களுக்கு ஊசி போட்டுவந்ததும் தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் மோகனவள்ளி கொடுத்த புகாரின் பேரில் அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் முத்தழகியை கைது செய்தார்கள்.
    Next Story
    ×