என் மலர்
செய்திகள்

கொரோனா தடுப்பூசி
நந்திவரத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சி பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சி பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. மேலும் பலர் உயிரிழந்து உள்ளனர். இந்த நிலையில் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சி சார்பில் நந்திவரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது. நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். தி.மு.க. பேரூர் செயலாளர் வக்கீல் ஜி.கே.லோகநாதன், நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ராஜேஷ், மற்றும் பேரூர் தி.மு.க. நிர்வாகிகள், முன்னாள் வார்டு கவுன்சிலர்கள், வார்டு செயலாளர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் கலந்துகொண்டு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். இதில் பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர்.
Next Story






