என் மலர்
செய்திகள்

முட்டைகோஸ் அறுவடை செய்யப்படாமல் நிலத்தில் விடப்பட்டு உள்ளதை காணலாம்
விலை வீழ்ச்சியால் அறுவடை செய்யாமல் நிலத்தில் விடப்பட்ட முட்டைகோஸ்
ஊட்டி, கோத்தகிரி பகுதிகளில் அறுவடைக்கு தயாராகியும் முட்டைகோஸ் அறுவடை செய்யப்படாமல் நிலத்தில் அப்படியே விடப்பட்டு உள்ளது.
ஊட்டி:
நேர கட்டுப்பாடு காரணமாக சிறு, குறு விவசாயிகள் அறுவடை செய்த காய்கறிகளை உரிய நேரத்துக்கு விற்பனைக்கு கொண்டு வர முடியவில்லை. மேலும் சரக்கு வாகனங்கள் சொந்தமாக வைத்து இருப்பவர்கள் நீலகிரி மட்டுமில்லாமல் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட வெளியிடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். சிறு விவசாயிகள் வாடகைக்கு சரக்கு வாகனங்களை எடுத்து காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு செல்ல அதிக செலவாகிறது. மேலும் வாகனங்களில் மூட்டைகளை இறக்கி வைக்க தொழிலாளர்களை ஏற்றி செல்ல முடியாத நிலை உள்ளது.
இந்த நிலையில் முட்டைக்கோஸ் விலை கடும் வீழ்ச்சி அடைந்து இருக்கிறது. இதனால் ஊட்டி, கோத்தகிரி பகுதிகளில் அறுவடைக்கு தயாராகியும் முட்டைகோஸ் அறுவடை செய்யப்படாமல் நிலத்தில் அப்படியே விடப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ முட்டைகோஸ் ரூ.15 முதல் ரூ.20 வரை விலை கிடைத்தது. தற்போது ஒரு கிலோ முட்டைகோஸ் ரூ.5 மட்டுமே விலை போகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சிறு, குறு விவசாயிகள் காய்கறிகளை வாகனங்களில் ஏற்றி செல்லும் போது போலீசார் தடையில்லாமல் சென்று வர அனுமதிக்க வேண்டும். முழு ஊரடங்கால் அறுவடை செய்த காய்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகிறோம். நேரடியாக நிலத்துக்கு வந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். முட்டைகோஸ் விலை வீழ்ச்சியால் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என்றனர்.
Next Story






