என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)
    X
    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

    வேலூர் மாவட்டத்தில் 41 போலீசார் கொரோனா தொற்றால் பாதிப்பு

    கொரோனா 2-வது அலையில் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் 41 போலீசார் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் தினமும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

    ஆனாலும் கொரோனா 2-வது அலையின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிகளை மீறும் நபர்களுக்கு அபராதம் விதிப்பது, மாவட்ட எல்லைகளில் இ-பதிவு இல்லாத வாகனங்களை திருப்பி அனுப்பும் பணி, முழு ஊரடங்கை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் எதிர்பாராதவிதமாக பாதிப்பு அடைவது போன்று காவல்துறையினரும் கொரோனாவினால் பாதிக்கப்படுகிறார்கள்.

    கொரோனா 2-வது அலையில் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் 41 போலீசார் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 18 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தனர். 2 பேர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மீதமுள்ள போலீசார் லேசான அறிகுறி காரணமாக வீடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். 
    Next Story
    ×