search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    தாக்டே புயல்- முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்

    தாக்டே புயலின் வேகம், நகர்வு குறித்து முதலமைச்சருக்கு வானிலை மைய தலைவர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்தார்.
    சென்னை: 

    அரபிக்கடலில் உருவாக்கியுள்ள தாக்டே புயல் காரணமாக தமிழத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. இது குறித்து தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

    இதில் தலைமைச் செயலாளர் இறையன்பு, வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் மற்றும் பேரிடர் மேலாண்மை இயக்குனர் அதுல்யா மிஸ்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

    புயலின் வேகம், நகர்வு குறித்து முதலமைச்சருக்கு வானிலை மைய தலைவர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்தார். 

    இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். 

    கோப்புப்படம்

    அதன்படி, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றுள்ள படகுகள் கரை திரும்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். 

    நிலச்சரிவு ஏற்படக்கூடிய மலை மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மழையால் பாதிக்கப்பட்டவர்களை முகாம்களில் தங்க வைக்கும்போது கொரோனா எச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாதிப்பு ஏற்பட்டக்கூடிய மாவட்டங்களில் உடனடியாக நிவாரணப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    அணைகளில் நீர்மட்டங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் வருவாய்துறையினர் முழு வீச்சில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 
    Next Story
    ×