search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சென்னையிலிருந்து அமெரிக்கா, லண்டனுக்கு செல்ல விமான கட்டணம் 3 மடங்கு உயர்வு

    சென்னையிலிருந்து அமெரிக்கா மற்றும் லண்டன் செல்ல இந்த மாத கடைசி வாரத்திலிருந்து மே மாதம் முதல் வாரம் வரை விமான டிக்கெட் விலை ஒருவருக்கு ரூ.1 லட்சத்தில் இருந்து, ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஆலந்தூர்:

    நாடு முழுதும் கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக இருப்பதால் பயணிகள் விமான பயணம் செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. விமான பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக நாளுக்குநாள் குறைந்து வருகிறது. அது மட்டுமன்றி இந்தியாவில் அதிகளவில் நோய் தொற்று பரவுவதால் வெளி நாடுகளும் இந்தியாவில் இருந்து செல்வதற்கு பல கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது.

    இந்தியாவுக்கான விமான போக்குவரத்தை பல நாடுகள் நிறுத்தும் சூழல் நிலவுவதால் மும்பை மற்றும் டெல்லி போன்ற நகரங்களில் இருந்து வெளியேறும் அவசரத்தில் மக்கள் உள்ளனர். இதன் காரணமாக மும்பை, டெல்லி நகரங்களில் இருந்து நியூயார்க், லண்டன், சான்பிரான்சிஸ்கோ ஆகிய இடங்களுக்கு விமான கட்டணம் ரூ.1 லட்சத்து 44 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது.

    இதேபோல் சென்னையில் இருந்து அமெரிக்கா மற்றும் லண்டனுக்கு செல்ல நேரடி விமான சேவை இல்லை. துபாய், அபுதாபி போன்ற நாடுகளுக்கு சென்று அங்கிருந்து செல்ல வேண்டும்.

    கோப்புபடம்

    சிறப்பு விமானங்கள் மட்டும் இயக்கப்படுகின்ற நிலையில், பயணிகள் எண்ணிக்கை இல்லாததினாலும், நேரடி விமான சேவை இல்லாததாலும், வெளிநாடுகளில் விமான பயணிகளுக்கு பல கட்டுப்பாடுகள் இருப்பதினாலும் சென்னையிலிருந்து அமெரிக்கா மற்றும் லண்டன் செல்ல இந்த மாத கடைசி வாரத்திலிருந்து மே மாதம் முதல் வாரம் வரை விமான டிக்கெட் விலை ஒருவருக்கு ரூ.1 லட்சத்தில் இருந்து, ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சுமார் 39 ஆயிரம் ரூபாயில் இருந்து 45 ஆயிரம் ரூபாய் வரை சராசரியாக இருக்கின்ற டிக்கெட் கட்டணம் ஒரேடியாக மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது விமான பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×