search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனி விமானம் மூலம் புதுச்சேரி வந்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
    X
    தனி விமானம் மூலம் புதுச்சேரி வந்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

    புதுச்சேரிக்கு தனி விமானத்தில் வந்த கொரோனா தடுப்பு மருந்து - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கொண்டு வந்தார்

    புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ‘ரெம்டெசிவர்’ என்ற மருந்து செலுத்தப்படுகிறது.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ‘ரெம்டெசிவர்’ என்ற மருந்து செலுத்தப்படுகிறது.

    அந்த மருந்துக்கு புதுவையில் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டது. எனவே கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து அந்த மருந்து பெற்று வர நடவடிக்கை எடுத்தார்.

    இந்த நிலையில் ‘யுகாதி’ பண்டிகையை முன்னிட்டு ஐதராபாத் சென்ற அவர் நேற்று மாலை தனி விமானம் மூலம் புதுச்சேரி வந்தார். அப்போது ‘ரெம்டெசிவர்’ மருந்து 1000 டோசை கையோடு எடுத்து வந்தார். புதுச்சேரி விமான நிலையத்தில் அந்த மருந்தை சுகாதாரத்துறை செயலர் அருணிடம் ஒப்படைத்தார்.
    Next Story
    ×