search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வகுப்பறை கட்டிடத்திற்கு முன்பு கொட்டப்பட்டுள்ள செங்கற்களை படத்தில் காணலாம்.
    X
    வகுப்பறை கட்டிடத்திற்கு முன்பு கொட்டப்பட்டுள்ள செங்கற்களை படத்தில் காணலாம்.

    வகுப்பறை முன்பு கொட்டப்பட்டுள்ள செங்கற்களை அப்புறப்படுத்த வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை

    கண்டமங்கலம் அரசினர் தொடக்கப்பள்ளி வகுப்பறை முன்பு கொட்டப்பட்டுள்ள செங்கற்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருவெண்காடு:

    சீர்காழி அருகே பாகசாலை ஊராட்சிக்குட்பட்ட கண்டமங்கலம் பகுதியில் அரசினர் தொடக்கப்பள்ளி உள்ளது.

    இந்த பள்ளியில் 125 மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும் இந்த பள்ளி வளாகத்தில் குழந்தைகள் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இந்தநிலையில் இந்த பள்ளி வளாகத்தில் சமீபத்தில் பழுதடைந்த கட்டிடம் இடிக்கப்பட்டது. கட்டிடத்தை இடித்த போது செங்கற்களை அப்புறப்படுத்தாமல் அதே வளாகத்தில் உள்ள ஒரு வகுப்பறை கட்டிடத்தின் முன்பு கொட்டி உள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், கட்டிட இடிபாடுகளை வளாகத்தை விட்டு அப்புறப்படுத்தாமல், வகுப்பறை கட்டிடத்திற்கு முன்பு கொட்டி வைத்துள்ளனர்.

    கொட்டி வைக்கப்பட்டுள்ள செங்கற்கள் மீது மாணவர்கள் நடப்பது மிகவும் கஷ்டமாக இருக்கும். இன்னும் சில மாதங்களில் பள்ளி திறக்கப்பட உள்ள சூழ்நிலையில் மாணவர்கள் மற்றும் அங்கன்வாடி குழந்தைகள் அந்த வளாகத்தில் நடப்பதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வகுப்பறை முன்பு கொட்டப்பட்டுள்ள செங்கற்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×