என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஊட்டியில் கார்களின் கண்ணாடியை உடைத்து திருட்டு- ஒருவர் கைது

    ஊட்டியில் கார்களின் கண்ணாடியை உடைத்து பணம், நகை, செல்போன்கள் திருடப்பட்ட சம்பவத்தில் போலீசார் ஒருவரை கைது செய்தனர்.
    ஊட்டி:

    ஊட்டியில் உள்ள கமர்சியல் சாலையோரத்தில் கடந்த 17-ந் தேதி 2 சுற்றுலா பயணிகளின் கார் கண்ணாடியை உடைத்து 2 செல்போன்கள், 5 பவுன் தங்க நகை, ரூ.37 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஊட்டி நகர மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஊட்டி கமர்சியல் சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த ஒரு காரின் கண்ணாடியை உடைத்து கைப்பை திருடப்பட்டது. அதை திருடிய ஒருவரை பொதுமக்கள் கையும், களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் ஏற்கனவே அங்கு நடந்த மேற்கண்ட 2 திருட்டு சம்பவங்களை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.

    விசாரணையில் அவர் திருச்சியை சேர்ந்த மூர்த்தி (வயது 39) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவருடன் சேர்ந்து மேலும் 2 பேர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×