என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கடன் தொல்லை: கட்டிட ஒப்பந்ததாரர் தூக்குப்போட்டு தற்கொலை

    கடன் தொல்லையால் கட்டிட ஒப்பந்ததாரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட காளம்புழா பகுதியை சேர்ந்தவர் விஜேஷ் (வயது 30). கட்டிட ஒப்பந்ததாரராக இருந்து வந்தார். இவர் பல்வேறு தேவைக்கு வங்கி மற்றும் தனியாரிடம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இது தவிர தொழிலிலும் அவருக்கு போதிய வருவாய் கிடைக்கவில்லை. இதனால் கடன்களை திரும்ப அடைக்க முடியாமல் திணறினார்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஜேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்ட அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கடன் தொல்லையால் கட்டிட ஒப்பந்ததாரர் விஜேஷ் தற்கொலை செய்து கொண்டது உறுதியானது. மேலும் சம்பவம் குறித்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×