என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    திருமணமான 14-வது நாளில் விபத்தில் வாலிபர் பலி

    வேதாரண்யம் அருகே திருமணமான 14-வது நாளில் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம் மேலக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 32). இவர் அப்பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று மாலை இவர் மோட்டார் சைக்கிளில் கரியாப்பட்டினம் செங்காத்தலை பாலத்திலிருந்து வேதாரண்யத்துக்கு வந்து கொண்டிருந்தார்

    மணக்காடு கிராமம் பிள்ளையார் குளம் அருகே வந்தபோது ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் செல்வம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதி தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.

    இவருக்கு திருமணமாகி 14 நாட்களே ஆகிறது. இதுகுறித்து கரியாப்பட்டினம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில்குமரன் வழக்குப் பதிவு செய்து செல்வத்தின் உடலை வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை செய்து வருகிறார்.

    Next Story
    ×