search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாகன சோதனை
    X
    வாகன சோதனை

    பறக்கும்படையினர் ஆவணம் இன்றி பொருட்கள் ஏற்றி வந்த வேன் பறிமுதல்

    பறக்கும்படையினர் ஆவணம் இன்றி பொருட்கள் ஏற்றி வந்த மினி வேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருத்தாலசம்:

    தற்போது தமிழக சட்டமன்ற தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. எனவே மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையில் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

    அதன்படி விருத்தாசலம் அருகே உள்ள வயலூர் பஸ் நிறுத்தம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி தண்டபாணி தலைமையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திருமேனி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது உளுந்தூர்பேட்டை பகுதியில் இருந்து வந்த மினி வேனை வழிமறித்து சோதனை செய்தனர். சோதனையில் முறையான ஆவணங்கள் எதுவும் இன்றி சுமார் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் சேர்கள், பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள், ஜாமென்ட்ரி பாக்ஸ்கள் இருந்தது தெரியவந்தது.

    இதுபற்றி வேன் டிரைவரிடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணான பதிலை கூறியுள்ளார். மேலும் அவைகளுக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் சந்தேகமடைந்த போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து விருத்தாசலம் துணை தாசில்தார் வேல்முருகனிடம் ஒப்படைத்தனர்.

    தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அந்த வாகனம் சென்னையில் இருந்து பொருட்களை ஏற்றி தி.நகரில் இறக்க வேண்டிய ரசீது மட்டும் இருந்துள்ளது. அதுவும் போலியான ரசீது என தெரியவந்தது. மேலும் விருத்தாசலத்தில் இறக்குவதாக கூறி ஒரு விலாசத்தை தந்துள்ளனர்.

    ஆனால் அப்படி ஒரு விலாசம் விருத்தாசலத்தில் இல்லாததால் பிளாஸ்டிக் பொருட்களோடு, மினி வேனை பறிமுதல் செய்து விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் அதற்குரிய முறையான ஆவணங்களை காண்பித்த பின் பொருட்கள் மற்றும் மினி டெம்போ ஒப்படைக்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    Next Story
    ×