என் மலர்
செய்திகள்

கோப்பு படம்.
காட்பாடி அருகே ஓடும் ரெயிலில் பெண்ணிடம் சில்மிஷம்
காட்பாடி அருகே இன்று அதிகாலை ஓடும் ரெயிலில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை புறப்பட்டு வந்தது. அதில் கேரளாவைச் சேர்ந்த 40 வயது இளம்பெண் ஒருவர் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தார்.
அதே பெட்டியில் இருந்த 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கத்தி கூச்சலிட்டார். அங்கிருந்த பயணிகள் அவரை மடக்கிப் பிடித்தனர்.
இதுதொடர்பாக பெண் பயணி காட்பாடி ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் புதுச்சேரிக்கு நண்பர்களுடன் மது குடிக்க செல்வது தெரியவந்தது.
தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் ரெயில் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story






