என் மலர்

  செய்திகள்

  மாயம்
  X
  மாயம்

  கயத்தாறில் இளம்பெண் மாயம்- போலீசில் புகார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கயத்தாறில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட இளம்பெண் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
  கயத்தாறு:

  கயத்தாறு தாலுகாவைச் சேர்ந்த கலப்பை பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சங்கர். இவரது மனைவி குட்டிபாப்பா. இவர்களது மகள் சுபத்ரா தேவி (வயது 21). இந்த நிலையில் சுபத்ரா தேவிக்கு திருமணம் செய்வதற்காக மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்தனர். வரும் பங்குனி மாதத்தில் திருமணம் என கூறியிருந்தனர். 

  இந்த நிலையில் சுபத்ரா தேவி கங்கைகொண்டான் அருகே உள்ள துறையூரில் தனது சித்தி வீட்டுக்கு வந்திருந்தார். அங்கு இருந்த அவர் நேற்று அதிகாலையில் திடீரென மாயமாகி விட்டார். இதனால் சித்தி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து பல்வேறு இடங்கள் மற்றும் நண்பர்கள் ,உறவினர்கள் வீட்டில் தேடியும் கிடைக்கவில்லை. 

  இதுகுறித்த புகாரின் பேரில் கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோன்சி வழக்குப்பதிவு செய்து சுபத்ரா தேவியை தேடி வருகின்றனர்.
  Next Story
  ×