என் மலர்
செய்திகள்

விபத்து
அறந்தாங்கி அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்- 3 பேர் காயம்
அறந்தாங்கி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி அருகே உள்ள கே.புதுப்பட்டியை சேர்ந்தவர் செங்கதிர்வேல் (வயது 18). இவர் நேற்று அவரது நண்பரின் நிகழ்ச்சிக்கு வந்து விட்டு நண்பர்கள் வசந்த், ராகுல் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் அழியாநிலை வாழக்குடியிருப்பில் இருந்து அறந்தாங்கி-புதுக்கோட்டை மெயின் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக நாகப்பட்டினத்தை சேர்ந்த ராஜேந்திரன் (46) என்பவர் ஓட்டி வந்த கார், எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில், மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் காயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






