என் மலர்
செய்திகள்

அபராதம்
புகையிலை பொருட்கள் விற்ற 2 வியாபாரிகளுக்கு அபராதம்
குன்னூரில் புகையிலை பொருட்கள் விற்ற 2 வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
குன்னூர்:
குன்னூர் பகுதியில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி நந்தகுமார் தலைமையிலான அதிகாரிகள் குன்னூரில் உள்ள கடைகளில் திடீரென சோதனை நடத்தினர். அப்போது புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 வியாபாரிகளுக்கு மொத்தம் 8 ஆயிரம் அபராதம் விதித்து, வசூலிக்கப்பட்டது. மேலும் முகக்கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 5 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.
Next Story






