search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பெண்ணுடன் பழக்கம்: கல்லூரி மாணவரை தாக்கிய 3 பேர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கரூர் அருகே பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதால் கல்லூரி மாணவரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கரூர்:

    கரூர் அருகே உள்ள செல்லாண்டிபாளையத்தை சேர்ந்தவர் தீபன் (வயது 21). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், ராயனூர் முகாமை சேர்ந்த குணா என்கிற சந்திரசேகரும்(27) நண்பர்களாக பழகி வந்தனர். இதன் காரணமாக தீபன், குணா வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது குணாவின் மனைவிக்கும், தீபனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. 

    இதனை அறிந்த குணா அவர்களை கண்டித்துள்ளார். இருந்தாலும் அவர்கள் தொடர்ந்து பழகி வந்தனர். இதனால், ஆத்திரம் அடைந்த குணா மற்றும் உதயகுமார் (25), பட்டிபாபு என்கிற செல்வகுமார் (23) ஆகிய 3 பேரும் சேர்ந்து தாந்தோணிமலை மில்கேட் டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்று கொண்டு இருந்த தீபனை மடக்கி அருகே உள்ள காட்டு பகுதிக்கு அழைத்து சென்று தாக்கியுள்ளனர். 

    இதில், படுகாயம் அடைந்த தீபன் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, தாந்தோணிமலை போலீசில் தீபன் கொடுத்த புகாரின்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து குணா உள்பட 3 பேரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    Next Story
    ×