என் மலர்

  செய்திகள்

  திமுக தலைவர் முக ஸ்டாலின்
  X
  திமுக தலைவர் முக ஸ்டாலின்

  உங்கள் தொகுதியில் ஸ்டாலின்- புதிய கோணத்தில் திமுக பிரசாரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் வரும் 29 முதல் புதிய கோணத்தில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறினார்.
  சென்னை:

  சென்னை கோபாலபுரம் கருணாநிதி இல்லத்தில் இருந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

  * அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் பல கோடி ரூபாய் கொள்ளை நடைபெற்றுள்ளது.

  * பெரிய முதலீடுகளை ஈர்க்க முடியாத மாநிலமாக தமிழகம் இருக்கிறது.

  * தேர்தலை மனதில் வைத்து ரூ.2500 கொடுக்கப்பட்டது.

  * சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, விவசாயிகள் வஞ்சிப்பு, வேலைவாய்ப்பு இல்லை என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

  மேலும் அவர் கூறுகையில், வரும் 29ந்தேதியில் இருந்து புதிய கோணத்தில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளோம். மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதே எனது முதல் பணி என்று உறுதியளிக்கிறேன்.

  * விடியலை நோக்கி, மக்கள் கிராம சபையை தொடர்ந்து ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பிரசாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

  * ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் பிரசார திட்டம் திருவண்ணாமலையில் தொடங்க உள்ளது.

  * மக்கள் பிரச்சனைகள் தொடர்பான மனுக்களை நானே சேகரித்து சீல் வைத்து மக்களுக்கு ரசீது வழங்குவேன்.

  திமுக ஆட்சிக்கு வந்ததும் போர்க்கால அடிப்படையில் மக்கள் பிரச்சனைகளுக்கு 100 நாளில் தீர்வு காணப்படும்.

  * ‘சொன்னதை செய்வோம், செய்வதைதான் சொல்வோம்’. மக்களிடம் தரப்படும் விண்ணப்பத்தில் குறைகளை எழுதி தந்தால், திமுக ஆட்சி அமைந்ததும் 100 நாளில் பிரச்சனை சரி செய்யப்படும்.

  * www.stalinani.com என்ற மின்னஞ்சல் மூலமோ 91710 91710 என்ற எண்ணிலோ புகாரளிக்கலாம்.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×